திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 5ந் தேதிவரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு வருகிற 12ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிடவும் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.