திருவள்ளூர், ஏப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்போடு 2256 வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கிவுள்ளது.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திருவள்ளூர் 296 வாக்குப்பதிவு மையங்கள், பொன்னேரியில் 311 வாக்குப்பதிவு மையங்கள், கும்மிடிப்பூண்டியால் 330 வாக்குப்பதிவு மையங்கள்,  மாதவரம் 475 வாக்குப்பதிவு மையங்கள்,  பூவிருந்தவல்லி 395 வாக்கு பதிவு மையங்கள்,  ஆவடி 449  வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,256 வாக்கு  மையங்களுக்கு தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வாகனங்கள் மூலம் EVM மின்னணு வாக்கு இயந்திரங்கள்,V.V. பேட், கருப்பு மை என  தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here