திருவண்ணாமலை அக்.28-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனிதவள மேலாண்மை துறையின் சார்பாக அக்டோபர் 26 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை 7 நாட்கள்  கடைபிடிக்கப்படும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம்  (26.10.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,  தலைமையில் கீழ்க்கண்ட உறுதிமொழியினை அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் ஏற்றுக் கொண்டனர்.

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் தடையாக உள்ளது என்பதை நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வழிப்புணர்வுடனும் உயர்தரமான நேர்மையுடன் எல்லா நேரங்களிலும் ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.
எனது வாழ்க்கையில் அனைத்து நடவடிக்கைகளிலும் நன்னடத்தையுடனும் சட்டத்தை மதித்தும் நடந்து கொள்வேன்.
லஞ்சம் கொடுக்கவோ ஏற்கவோ மாட்டேன். எனது அனைத்துப் பணிகளையும், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்வேன். பொதுநல நோக்கத்தில் எனது பணிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
எனது சொந்த நடத்தையில் நேர்மையுடன் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்வேன். லஞ்சம் தொடர்பாக எனக்கு தெரிய வரும் தகவல்களை உரிய அமைப்புகளுக்குத் தெரிவிப்பேன்.

இந் நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு.பிரதாப்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here