சீர்காழி, மே. 15 –
சீர்காழி சேந்தங்குடி பகுதியில் உள்ள கோழிக்கறி விற்பனை கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லோடு வாகன ஆட்டோக்களை திருடி சென்ற நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 வாகனங்களையும் மீட்டனர்.
சீர்காழி அருகே சேந்தங்குடி பகுதியில் கோழிக்கறி மொத்த விற்பனை கடை உள்ளது. இந்த கடையின் முன்பு இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லோடு வாகன ஆட்டோக்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
மேலும் அத்திருட்டுக் குறித்து கடை மேலாளர் தென்பாதி திருவள்ளுவர் நகரை சேர்ந்த ம.கோகிலன் (29) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்தப் .புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் சதீஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது சட்டநாதபுரம் பகுதியில் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியாக வந்த லோடுஆட்டோக்களை நிறுத்தி விசாரித்தபோது அதனை ஓட்டுவந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தையடுத்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மணல்மேடு பகுதியை சேர்ந்த சூர்யா (24), சத்தியன் (23) என்பதும் சேந்தங்குடி கோழிக்கறி விற்பனை கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவை திருடி வந்ததும் அவ்விசாரணையில் தெரியவந்தது.
அதுக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.























