பாண்டிச்சேரி, பிப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …

பாண்டிச்சேரி சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்றுத் தொடங்கிய நிலையில் அதில் முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதத்திற்கான அரசின் செலவினங்களுக்காக ரூ.4ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

புதுச்சேரி 15வது சட்டபேரவையின்  4வது கூட்டம் நேற்று காலை 9.45 மணிக்கு துவங்கியதும், திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். பேரவையில் முதலாவதாக முன்னாள் அமைச்சர் ப.கண்ணன், வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பங்காரு அடிகளார், கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா, தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீபி, விஜயகாந்த் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாதத்திற்கு அரசின் செலவினங்களுக்காக ரூ. 4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான இடைக்கால படஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார்.

மேலும் விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதனை அலட்சியப்படுத்தி கேஷ்டி பூசல் காரணமாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்றும், குறைந்தபட்சம் 3 நாட்களாவது பேரவையை நடத்தக்கோரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

அதேப் போல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் மத்திய நிதி கமிஷனில் மத்திய அரசு சேர்க்காததை கண்டித்தும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்  நேரு பெரவையில் இருந்து வெளி நடப்பு செய்தார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு புதுச்சேரி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு ஒப்புதலளிப்புகள் பெறுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற சட்ட முன் வரைவை உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேரவையில் அனுமதி கோரி சட்டமுன் வரைவை அறிமுகப்படுத்தினார. அதன் பின் சட்ட முன்வரைவு பேரவையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்ட முன்வரைவு கொண்டு வந்ததற்கு என்ன காரணம், சுற்றுச்சூழலுக்கு மாசுபடாத தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கமுடியுமா? பிறமாநிலங்களில் அனுமதி பெறமுடியாத தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வந்து விடும் என்ற ஆபத்து உள்ளது மேலும் சட்டமுன் வரைவை விவாதிக்காமல் நிறைவேற்றப்பட்டதாகவும் எதிர்கட்சித்தலைவர் சிவா பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து அரசின் 5 மாத செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டு காலவரையின்றி பேரவையை ஒத்திவைத்து அறிவித்தார் சபாநாயகர் செல்வம்.

முன்னதாக அரசு சார்பில் வழங்கப்பட்ட கார் அவ்வப்போது பழுதாகிவிடுவதால் மாற்று கார் வழங்கக்கோரி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் பாதுகாப்பு அதிகாரியுடன் இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்தார். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பதிப்பு ஏற்படுத்தும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார் கோரிக்கை வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here