குடவாசல், செப். 14 –
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜா, வயது 50, கீர்த்திவாசன், வயது 50, சோமசுந்தரம், வயது 80 ஆகியோர், மேலங்குடி பகுதியில் விவசாய வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது குமாரக்குடி அருகே விஷ கதண்டு வண்டு மூன்று பேரையும் கடித்துள்ளது.
உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று ராஜா வயது 50 என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கீர்த்திவாசன், சோமசுந்தரம் ஆகிய இரண்டு பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்குதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றனர். மேலும் தொடர்ந்து இம்மாவட்டத்தில் பல்வேறு பகுகளில் பெருகி மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஊற்படுத்தி வரும் கதண்டு என கூறப்படும் விஷ வண்டுகளை அழித்துடும் நடவடிக்கையை அரசு நிர்வாக மேற் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.






















