திருவண்ணாமலை. அக்.8-

தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டு, இவ்வாரியத்தின் மூலம் தூய்மைப் பணிபுரிவோர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  

தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு / அரசு சாரா அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிவோர்கள், தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு / அரசு சாரா அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து நபர்களுக்கும் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி / ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகி புதியதாக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் பெற்று முழுமையாக பூர்த்தி செய்து தாங்கள் பணிபுரியும் அலுவலக மூலம் உரிய சான்று பெற்று இவ்விண்ணப்பத்தினை “மாவட்ட மேலாளர், தாட்கோ, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை” என்ற முகவரியுள்ள அலுவலகத்தில் ஒப்படைத்து இதற்கான தூய்மைப் பணிபுரிவோர் நல வாரிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here