மும்பை:

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அளித்த பேட்டியில், ‘உலக சாம்பியனான இங்கிலாந்து அணி மிகவும் வலுவானதாகும். எனவே நாம் நம்பிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும். 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டி முடிவு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டி தொடரில் இருந்து முடிந்த வரை அதிக புள்ளிகள் பெற முயற்சிப்போம்’ என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here