திருவண்ணாமலை. அக்.8-

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையினை மாண்புமிகு தமிழக சட்டபேரவைத் துணைத் தலைவர்  கு. பிச்சாண்டி  துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் மேம்பாட்டு நிதியின் கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையினை தமிழக சட்டபேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி துவக்கி வைத்தார்.

அழுத்தம் ஸ்விங் உறிஞ்சுதல் ஆக்ஸிஜன் ஆலை ஓட்டம் நமது பாரத பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி மூலமாக நாடு முழுவதும் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிறுவப்படுகிறது. நமது மாவட்டத்தில் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மற்றும் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையிலும் நிறுவப்படுகிறது. இந்த அழுத்தம் ஸ்விங் உறிஞ்சுதல் ஆக்ஸிஜன் ஆலை ஓட்டம் நிறுவுவதின் முக்கிய நோக்கம் கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தங்கு தடை இல்லாமல் கிடைப்பதே ஆகும். இதன் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் என்னவெனில், ஆகாய மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற வாயுக்கடை உள்ளிழுத்து இதில் ஆக்சிஜனை மட்டும் தனியாக பிரித்து மற்ற வாயுக்களை பில்டர் செய்து ஆக்ஸிஜன் மட்டும் குழாய்களின் மூலம் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கொரேனா சிகிச்சை வார்டுகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் அனுப்புவது ஆகும்.

இதன் மூலம் 93 சதவீதம் தூய ஆக்ஸிஜன் கிடைக்கும். நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த கொள்கலன் ஆகும். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை இதன் மூலம் உருவாகிறது. இந்த பிளாண்ட் கொள்கலனின் கட்டுமான மதிப்பு ரூ.75.00 இலட்சம் ஆகும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  நாடாளுமன்ற உறுப்பினர் (திருவண்ணாமலை) சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.திருமாள்பாபு, மருத்துவர்கள், செலிவியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here