தஞ்சாவூர், ஏப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து  மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே. வாசன்  திறந்த ஜீப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன்  கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றவர் ம.க.ஸ்டாலின்  என் மண் என் மக்கள் என் தொகுதி மண்ணின் மைந்தனாக கேட்கிறேன் ம.க . ஸ்டாலினை வெற்றி பெற வைக்க வேண்டும் மோடியின் கரத்தை வலுப்படுத்துங்கள் மத்தியில் மோடியின் நல்லாட்சி அமைய வேண்டும்  தமிழக அரசின் வேதனையான சாதனை மக்கள் விரோதம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு அனைத்து தரப்பு மக்கள் மீதும் சுமையை ஏற்றிய அரசு பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்வர்கள் பலருக்கு உரிமை தொகை ஆயிரம் கிடைக்கவில்லை கிடைக்கின்ற பணமும் டாஸ்மார்க் செல்வதுதான் திராவிட மாடல் .

திமுக கூட்டணி கட்சியினர் கல்வியில் அரசியலை புகுத்த கூடாது கச்சத்தீவை மீட்கும் காலம் வரும் டாஸ்மார்க் குறைந்த பாடில்லை டாஸ்மார்க் ஒருபுறம் போதை மறுபுறம் என தமிழகத்தை சீரழித்துக் கொண்டுள்ளது.

திராவிடம் இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசுதான் என பேசினார் . தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here