முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – இன்ஜினியரிங் பட்டங்கள் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக  அல்லாமல் , பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக இருக்க தங்களுக்கான தகுதியை கல்வி கற்கும் காலத்திலயே வளர்த்துக் கொள்ள வேண்டும்  சிறப்பு விருந்தினர் பேச்சு


ராமநாதபுரம், ஜூலை 28-இன்ஜினியிரங் பட்டம் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக்கூடாது. பல நபர்களுக்கு வேலை தருபவர்களாக தொழில் முனைவோராக உயர வேண்டும், என, அகில இந்திய தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சி நிறுவன மற்றும் ஆசிரிய மேம்பாட்டு ஆணைய ஆலோசகர் திலீப் மால்கடே கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி 31வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 வது பட்டமளிப்பு விழா அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசப் தலைமையில் நடந்தது.
அறக்கட்டளை செயல் இயக்குனர் ஹமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். கல்லுாரி தீன் முகம்மது ஜஹாபர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அப்பாஸ் மைதீன் கல்லுாரி ஆண்டறிக்கை வாசித்தார்.
அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சி நிறுவன மற்றும் ஆசிரிய மேம்பாட்டு ஆணைய ஆலோசகர் திலீப் என் மால்கடே சிறப்பு விருந்தினராக பங்கேற்று 340 இளநிலை பொறியியல் மாணவர்களுக்கும் 65 முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைகழக தரவரிசை பட்டியலில் வெற்றி பெற்ற 14 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் திலீப் என் மால்கடே பட்டங்களை வழங்கி பேசுகையில், மிகவும் பின் தங்கிய பகுதியில் தமிழகத்திலேயே முதன் முதலாக இக்கல்லுாரியை உருவாக்கிய முகம்மது சதக் அறக் கட்டளையின் கல்வி பணி பாராட்டத் தக்கது, பட்டதாரிகளாகிய நீங்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் பல நபர்களுக்கு வேலை தருபவர்களான தொழில் முனைவோர்களாக உயர வேண்டும். மேலும் மாணவர்களின் ஆராய்ச்சி நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும் வழிவகை செய்ய வேண்டுமெனவும், பேசினார்.
விழாவில் சதக் அறக்கட்டளை நிறுவனங்களில் ஒன்றான முகம்மது சதக் ஏ.ஜே., பொறியியல் கல்லுாரியின் நெறியாளர் மணிவண்ணன், முன்னாள் எம்எல்ஏ ஹசன் அலி, முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ரஜபுதீன், முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல் நாதிரா பானு, முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தகோபால், முகம்மது சதக் சிபிஎஸ்இ முதல்வர் ஆலியா, முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் மற்றும் சைட்டக் முதல்வர் ரியாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் அனைத்து துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் செய்திருந்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here