மீஞ்சூர், டிச. 02 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நந்தன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் கேசவன் உள்ளிட்டோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய முதன்மை துணைத் தலைவர் ஏ எம் விக்ரமராஜா கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
தமிழக முழுவதும் கடந்த 29-ஆம் தேதி வணிகவரித்துறை அலுவலர்களின் அத்துமீறல்கள் நடந்ததாகவும், அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மாலை துறை அமைச்சரை சந்தித்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்த உள்ளதாகவும், மேலும், ஜிஎஸ்டி வரி குளறுபடிகள் என்பது தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளிலும் உள்ளதாகவும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடைய செயல்பாடுகளும் அதேபோல் உள்ளதாகவும், கார்பரேட் கம்பெனியுடன் கைகோர்த்து செயல்படுவதால் சிறு குறு நடுத்தர வியாபாரிகளிடையே அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும்,
கோவையில் வரும் 27 ஆம் தேதியன்று நடைபெற உள்ள மாநில மாவட்ட கிளை சங்கத்தின் நிர்வாகிகள் பொதுகுழுவில் அப்பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்து பல்வேறு தீர்மானங்களை எடுக்க இருப்பதாகவும், அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரையும், மத்திய நிதியமைச்சரையும் சந்திக்க இருப்பதாகவும், அதுக்குறித்து டிசம்பர் 27 மற்றும் 28-இல் டெல்லிக்கு சென்று ஜிஎஸ்டி வரி விதிப்பை சரி செய்வதற்கு ஆவணம் செய்வதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அழுத்தம் தர உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் இந்தியா முழுவதும் உள்ள சாதாரண, சாமானிய உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும் எனவும், கார்பரேட் கம்பெனி மட்டும் தான் முதலாளி தத்துவத்தோடு இருக்கும் எனவும், இதனால் விலைவாசி கட்டுக்குள் இருக்காது எனவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
அதுப்போன்றே ஆன்லைன் டிரேடிங் ஏற்படுத்தும் ஆபத்துக்களை தமிழக முதல்வர் மற்றும் பிரதமரிடம் எடுத்து சென்று சாமானிய மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளதாக அப்போது தெரிவித்தார்.
இப்பாதிப்புகளினால் நாடு முழுவதும் உள்ள சுமார் 21 கோடி வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகவும், மேலும், புதிய உணவுப்பொருள் சட்டம் என்பது, உணவுப் பொருள்கள் ஆன்லைன் மார்க்கெட்டில் வாங்கும் பொருளை நேரடியாக பார்க்க முடியாது, தொலைபேசி மூலமாக பொருளை பார்க்க முடியும், அது சரியான பொருளாக இருக்கிறதா சரியில்லையா என்பதெல்லாம் சோதிக்க முடியாது, கார்ப்பரேட் நிறுவங்களுக்கான இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும்,
மேலும், விவசாயிகள் பொருள்களை எடுத்து செல்லும் போது வணிக வரிவிதிப்பு இருக்கக் கூடாது எனவும், ஆன்லைன் மூலமாகவும், கிரெடிட் கார்டு மூலமாகவும் கரன்சி பயன்படுத்துவது ஆபத்தானது எனவும், கார்ப்பரேட் கம்பெனிக்கு உதவி செய்யக்கூடிய வகையில் இருக்குமே தவிர, சாமானியர்களை வாழ வைக்கும் திட்டமாக இருக்காது எனவும், கார்ப்பரேட் கம்பெனிகளை எந்த அரசு துறை அதிகாரிகளும் சோதித்தது இல்லை; அப்படி அவர்களை சோதித்தால் மட்டுமே உண்மையான நிலை தெரிய வரும்; எனவும், மேலும் அவர்கள் எவ்விதத்தில் பொருட்களை சந்தைப்படுத்துகிறார்கள் என்பதும் தெரியவரும் எனவும் அப்போது குறிப்பிட்டார்.
கார்ப்பரேட் கம்பெனி செய்யும் மோசடிகளை அரசுத்துறை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து அரசு சார்பாக நடத்தப்படும் பல சோதனைகளை சிறு குறு நடுத்தர வியாபரிகள் சந்தித்து வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். இதில் ருக்மணிமோகன்ராஜ். திமுக நகர செயலாளர் தமிழ் உதயன். அலெக்சாண்டர், முகமதுஅலி அபூபக்கர், நடராஜன், பன்னீர்செல்வம், ரியாஸ், பாபு அசேன், ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட திரளான பேரவையின் முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




















