பொன்னேரி, ஏப். 22 –

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த கூனம்குப்பம் கிராமத்தில் தனியார் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் கூனம்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட்  வகுப்புகளுடன் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறை ஏற்பாடு செய்யப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குத்துவிளக்கேற்றி இந்த ஸ்மார்ட் வகுப்பினை திறந்து வைத்து மாணவ மாணவிகளை வாழ்த்தினார்.

மேலும் அவர் பேசும்போது திருவள்ளூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக அரசு பள்ளிகளில் முன்மாதிரியான ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், மாவட்ட விளையாட்டு கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி .ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவூரான், ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை முருகம்மை. மற்றும் கதா தொண்டு நிறுவனம் பத்மஸ்ரீ .கீதா. தர்மராஜ் .உள்ளிட்ட நிர்வாகிகள் பணியாளர்கள், கூனங்குப்பம் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here