மயிலாடுதுறை, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறையில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் இன்று கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் அனைவரையும் குத்தாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்பு பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக ஏழு பேரையும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்று இரவு பெருமாள் தெற்கு வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற அஜித்குமார் என்ற இளைஞரை வழிமறித்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. மேலும் அவருடன் வந்த சரவணன் என்பவருக்கு கையில் வெட்டு காயத்துடன் தப்பி ஓடி உயிர் தப்பினார்.
மேலும் அக் கொலைக் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஏழு பேரை காவல்துறையினர் இன்று கைது செய்து குத்தாலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் கொலை வழக்கு மற்றும், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஏழு பேரையும் பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விபரம் 1.பில்கி @ சந்திரமோகன்-29 S/o ரவி கொத்த தெரு, மயிலாடுதுறை, 2. சதிஷ்-26 s/o சேகர் மெயின் ரோடு மணக்குடி, 3.பாம் பாலாஜி @ பாலாஜி-29 s/o சேட்டு கொசவந் தெரு திருவாருர் ரோடு மயிலாடுதுறை, 4.ஆவன்னா என்கிற ஷிராம்-26 s/o மனோகரன் அக்ரஹாரம் தெரு சித்தமல்லி, 5.சந்திரமௌலி-23 s/o சுரேஷ் கீழ வீதி திருவிழந்தூர் மயிலாடுதுறை, 6.வக்காரமாரி மோகன்தாஸ், 7.தருமபுரம் சத்தியநாதன்.





















