பொன்னேரி, ஏப். 22 –

திருவள்ளூர் மாவட்டம். பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் அதிபர் மற்றும் பங்குதந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் அன்னை மரியாள் நம்பிக்கை மாதிரி என்ற மையக்கருத்துடன் நவநாள் திருப்பலி துவங்கப்பட்டது.

தொடர்ந்து, அன்னையின் திருக்கொடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சூழ புனித மகிமை மாதா திருத்தலத்தை வலம் வந்து பின்னர் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கைகள் முழங்க அன்னையின் கொடி கம்பீரமாக பறக்க வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாலை ஆடம்பர கூட்டுத் திருப்பலி உடன் தேர் பவனியும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் மக்கள் பங்கு பெறும் தேர்பவனி நடைபெற உள்ளது.

கிராம மக்கள் திருவிழா குழுவினரோடு அன்னை மாதா திருத்தலத்தின் பங்குதந்தை கபிரியேல் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here