திருவண்ணாமலை, ஆக.2-

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 23ந் தேதி அன்று பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாத சூழ் நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும் அவரது பெற்றோரும் முன் வந்துள்ளனர். அக் குழந்தையை சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையத்தில் சேர்க்கப்பட்டது. இந் நிலையில் அரசு தொட்டில் குழந்தை சேர்க்கப்பட்ட அந்த பெண் குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here