தஞ்சாவூர், மார்ச். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் சாரு

திருவள்ளூர் மாவட்டம், கருணா சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. அந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்படனர்.

தஞ்சாவூர் அருகே கரந்தையில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பெரியநாயகி உடனுறை வசிஷ்டேஸ்வராக காட்சியளிக்கும் இத்தலத்தில் சோழ மன்னனின் கருங்குஷ்டம் நோயை தீர்த்ததாக அத்தல வரலாறு கூறுகிறது. பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பே பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அதேபோல் பங்குனி மூன்றாம் தேதியான நேற்று வசிஷ்டேஸ்வருக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டதும் வசிஷ்டேஸ்வருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு மனமுருகி சுவாமி வணங்கி வழிப்பட்டனர்.

மேலும் கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்டதே தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயமாகும். மேலும் அவ்வாலயம் கருங்குஷ்டம் நோயை போக்கியதாக அத்திருத்தல வரலாறு கூறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here