பொன்னேரி, ஜூலை. 18 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைப்பெற்ற இவ்வார்ப்பட்டத்தில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே. விஜயன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக  உயர்த்தி வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் 55 வயதிற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், பணியிடத்தில் மட்டுமின்றி விபத்து எங்கு நடந்தாலும், அதில் உயிரிழக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கலவித் தொகையினை 1 ஆம் வகுப்பு முதலே வழங்கிட வேண்டும்.  நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கவுரையினை முழங்கினார்கள்.

தொடர்ந்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 13 ஆம் தேதி கோட்டை நோக்கி 25000 தொழிலாளர்கள் பேரணியாக சென்று முற்றுகையிட உள்ளதாகவும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் அப்போது தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தொழிலாளர் உதவியாளர் சமூக பாதுகாப்பு நலன்கள் திட்ட அலுவலர் வரதராஜனிடம் கோரிக்கை மனுவை அழித்தனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here