ஈரோடு:
பிரமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை கடுமையாக சாடி பேசினார்.
இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா ஈரோடு அடுத்த சித்தோடுக்கு வருகிறார்.
முன்னதாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அமித்ஷா பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு அடுத்த சித்தோட்டுக்கு காலை 10 மணிக்கு வருகிறார்.
கங்காபுரம் டெக்ஸ்வேலியில் ஹெலிகாப்டர் இறங்குகிறது. 10.20 மணிக்கு அங்கு நெசவாளர்கள் பிரதிநிதிகளை சந்தித்து அமித்ஷா பேசுகிறார்.
இதை தொடர்ந்து கொங்கு மண்டலங்களான ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். காலை 11 மணிக்கு நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு 3 மணி அளவில் கோவை செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை அரசியல் வானில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் அமித்ஷா பாரதிய ஜனதா- அ.தி.மு.க. இடையே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.