சென்னை, ஜூலை. 28 –
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் பங்கேற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, வணிகவரித் துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்களுக்காக ரூ. 1.04 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 12 வாகனங்களை அத்துறைச் சார்ந்த நிர்வாகங்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து அவர் அவ்வாகன ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் இவ்விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, முதன்மைச் செயலாளர் / வணிகவரி ஆணையர் தீரஜ் குமார், வணிகவரி இணை ஆணையர் ( நிர்வாகம் ) வே.இரா.சுப்புலெட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


















