திருவேற்காடு செப். 7 –

திருவேற்காடு பசு மடத்தில் மஹா விஸ்வ ஸ்வாட்ச் சேவா சார்பில் சங்கரன் பிள்ளை ஏற்பாட்டில் உலக நன்மைக்கும் ஒற்றுமைக்கும் வழி வகுக்க வேண்டுதலுக்காக சிறப்பு கோ பூஜை  நடைப்பெற்றது. கோ பூஜையை கண்ணன் சாஸ்திரிகள் வேத மந்திரம் வாசித்து பசுவிற்கு உணவளித்து தீபாதரனை காட்டி நாட்டைப் பிடித்த துர் சக்திகள் விலக வேண்டி பூஜைகள் செய்தார்.

இந் நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி நகர திட்டமைப்பு அலுவலரும், ஆவடி மாநகராட்சி பணியாளர்கள் சங்கத்தலைவருமான தினகரன், தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.எஸ். இராமன், பா.ஜ.க. மகேந்திர ராஜ சிம்மன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று பசுவை  வணங்கி வழிப்பட்டனர்.

கோ என்றால் உலகம் என்று பொருள் படும். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்றும் அழைக்கிறோம்.

அப்படிப்பட்ட அந்த கோமாதாவை பூஜை செய்து வழிபடுவதால் நமக்குப்பேறுகளும், திருமகள் பார்வையும், தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோபூஜை செய்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகி அன்பின் அஸ்திவாரம் பலப்படும். பல்வேறு பலன்களை அள்ளித் தருகிற, அற்புத சக்தி வாய்ந்த `கோமாதா பூஜை’ யினால் விளையும் பலன் ஆகும்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா என்ற துர் சக்தி மக்களை பாதிக்காமல் இருக்கவும், மகாலட்சுமியின் கருணை உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்து அவர்களின் இல்லங்களில் செல்வம் செழித்தோங்க வேண்டி இந்த சிறப்புப் பூஜையை மஹா விஸ்வ ஸ்வட்ச் சேவா ஏற்பாடு செய்திருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here