சிப்காட், மார்ச். 07 –

திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

  மோகன் குடும்ப வருமானத்திற்காக அருகே உள்ள சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில், சம்பவ நாளான மார்ச் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் இரவு 8 மணியளவில் வீடு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் தனது மனைவி மற்றும் மகள் இல்லாததைக் கண்டு அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அது தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்காததால், மேலும் அதுக்குறித்து உற்றார் உறவினர்களுடன் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும், மற்றும் அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை, இதனால் காணாமல் போன தனது மனைவி மற்றும் மகளை கண்டுப்பிடித்து தரும்படி மேற்கூறியவாறு அவர் காவல்நிலையத்தில் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

  அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மற்றும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here