பொன்னேரி, மே. 13 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் ,கணினி அறை அண்மையில் பழுதடைந்த நிலையில் புதிய கட்டிடம் அமைக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மூன்று புதிய கட்டிடங்கள் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து இன்று கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், மற்றும் கிராம சேவை மையம், உள்ளிட்ட புதிய கட்டிடங்களை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து,கூடுவாஞ்சேரி பகுதியில் சுமார் 192, கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பது வகையான ஊட்டச்சத்து பொருட்களை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி. நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி .கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ராஜேஷ்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.























