முத்துப்பேட்டை, சன. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரபலக் கடை ஒன்றில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அக்கடையின் உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மாரியம்மன் கோவில் தெருவில் ஏழ்மை நிலையில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணியம், ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) அவருக்கு (17) வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தின் வறுமையின் காரணமாக அவரது 17 வயது மகளை பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அச்சிறுமி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சிவராமன் காலனி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி, முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள பிரபல ட்ராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த இருதினங்களுக்கு முன்பு 18 ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் அந்த ட்ராவல் நிறுவன உரிமையாளருக்கு அதேப்பகுதியில் செல் போன் விற்பனைச் செய்யும் கடையும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ட்ராவல் நிறுவனத்தில் உள்ள கழிவறை பூட்டியிருந்த நிலையில் உடல் உபாதையினை கழிப்பற்காக அக்கழிவறையின் சாவியினை பெறுவதற்காக செல்போன் கடையில் இருந்த உரிமையாளர் தாஜுதீன் (46) என்பவரிடம் பாத்ரூம் சாவி வாங்க சென்றுள்ளார்.
அந்நேரம் உரிமையாளர் தாஜுதீன் கடையின் கண்ணாடியின் கதவை பூட்டி விட்டு அச்சிறுமியின் கையினைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதுக் குறித்து பாலியல் தொந்தரவிற்கு ஆளான அச்சிறுமி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அப்புகாரின் பேரில் அக்காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜேஷ் சிறுமியை பாலியல் சீண்டல் செய்த கடை உரிமையாளர் தாஜீதீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பணிக்கு வந்தவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய உரிமையாளரே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















