சென்னை, ஆக 4 –
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரங்கனை லோவ்லினா போர்கோ ஹெய்னுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் அசாம் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து அனைத்துத் தடைகளையும் எதிர்த்துப் போராடி தன் தாய்க்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வண்ணம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை நீங்கள் பெற்றுவுள்ளதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன் நீங்கள் வென்ற வெங்கலப் பதக்கத்தை விடவும் உங்கள் வாழ்க்கையே இந்தியர்கள் அனைவருக்கும் சிறந்த ஊக்கமளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டு அந்த வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துவுள்ளார்