திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் பாரதப் பிரதமர் 71வது பிறந்தநாள் விழா திருநின்றவூர் நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியில் 1500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாநிலத்தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
ஆவடி, செப் . 18 –
இன்று ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேரூராட்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகர பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகவும் தலைமையேற்பாளராகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற பா.ஜ.க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் பாரதப்பிரதமர் மோடி அவர்களின் 7 ஆண்டு சாதனைகள் குறித்து உரையாற்றினார். பின்னர் ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், பகுதியை சார்ந்த சுமார் 1500 பயனாளிகளுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 – வது ஆண்டு பிறந்த நாள் பரிசாக பிரதமரின் 330 ரூபாய் ஆயுள் காப்பீடு திட்டம், மற்றும் 12 ரூபாய் விபத்து காப்பீடு திட்டம் இரண்டையும் இணைத்து வழங்கினார்.
மேலும், வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு, இந் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பொதுமக்களிடம் நெகிழ்ச்சியையும், இக் கட்சியின் மீதான கூடுதல் பற்றையும் வெளிப்படுத்தியது.
இந் நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜ்குமார், திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆவடி லயன் டாக்டர் எஸ் கே எஸ் மூர்த்தி, திருநின்றவூர் மண்டலத் தலைவர் தினேஷ்குமார், ஆவடி நகர கழகத் தலைவர் நித்தியானந்தம், ஆவடி நகர செயலாளர் யூ சந்தானம், மேலும் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், கடசி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.