மன்னார்குடி, மார்ச். 09 –

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி கிராமத்தில், நூறாண்டு பழமையான  அருள்மிகு ஶ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் உள்ளது.

மேலும் இத்திருக்கோயிலுக்கு மகாகும்பாபிஷக்ஷகம் நடத்திட ஊர்மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழாக் கமிட்டிக்குழு முடிவெடுத்து அதற்கான ஆலய திருப்பணிகள் பெரும் பணச்செலவில் நடைபெற்று முடிவுற்ற நிலையில்,  நேற்று மாலை யாகசால பூஜைகள் தொடங்கி நடைபெற்றஉ வந்த யாககால பூஜைகள் இன்று காலை நிறைவடைந்தது.

தொடர்ந்து,  மஹாபூர்ணாஹூதியுடன் மஹா தீபாராதனை  நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேலதாளங்கள் முழங்க கோவிலை வலம்வந்து விமான கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர்  ஸ்ரீ பட்டையன் ஸ்வாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here