ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. சுங்கம் மற்றும் மத்திய கலால் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.அருள்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் டி.அரவிந்தராஜ் திறந்து வைத்தார். மருந்தகத்தை டாக்டர் சின்ன துரை அப்துல்லா திறந்து வைத்தார். உள்நோயாளிகள் அறையை வழக்கறிஞர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி திறந்து வைத்தார். அவசர சிகிச்சை மற்றும் காய சிகிச்சை பிரிவை இஞ்ஜினியர் எஸ்.திருமாறன் திறந்து வைத்தார். பணியாளர் அறையை டாக்டர் கவிலூர் ரஹ்மான் திறந்து வைத்தார்.

டாக்டர்கள் மதுரம் அரவிந்தராஜ், பாத்திமா சின்னதுரை, மாக்கரெட் ரவி ராஜேந்திரன், சுமதி சகாய ஸ்டீபன் ராஜ் மற்றும் லீலாவதி மலையரசு ஆகியோர் மங்கள விளக்கேற்றினர்.
இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (ஓய்வு) வி.முனியசாமி, முன்னாள் எம்பி., எம்.எஸ்.நிறை குளத்தான், ஸ்டேட் வங்கி பணியாளர் (ஓய்வு) ஜி.துரைச்சாமி , முன்னாள் எம்எல்ஏ., உ.திசை வீரன், வழக்கறிஞர் எம். சோமசுந்தரம், இஞ்ஜினியர் சரவணன் , எம்.ராஜேந்திர குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். செல்லதுரை, கருப்பன், தனன்யஸ்ரீநிதி, தர்ஷனா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் வரவேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here