திருவாரூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நன்னிலம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் குடவாசல் தனாயர் மகாலில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், நன்னிலம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் ஒருங்கினைப்பாளருமான AKS விஜயன் தலைமை தாங்கினார்.
அதில் திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் V.அன்பரசன்,குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ஜோதிராமன், தெற்கு ஒன்றிய செயலாளர் B.பிரபாகரன், நன்னிலம் ஒன்றிய செயலாளர்கள் வே.மனோகரன், கேப்டன் SM.செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் நன்னிலம் த.கணபதி, தலைமை பொதுகுழு உறுப்பினர் குடவாசல் ஆர்.முருகேசன், பேரூர் கழக செயலாளர்கள், பா.சிவநேசன், வ. பக்கிரிசாமி, சிவதியாகு, AKT சேரன், பேரூராட்சி தலைவர் ப. ராஜசேகரன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் AS.குமார் மாவட்ட ஊராச்சி உறுப்பினர் மணவாள நல்லூர் சுப்ரமணியன், வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.