ராமநாதபுரம், ஜூன் 2-
ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சுரேஷ் சாமுவேல் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தி்ல ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியை துவங்கி அரசு தேர்வு எதிர்கொள்வது எப்படி என பயிற்சி வழங்கி வருகின்றனர். அந்தவகையில் பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகடமி துவங்கிய பின் தற்போது மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசு துறைகளில் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும், போலீஸ் துறையில் டி.எஸ்.பி., எஸ்.ஐ., போலீஸ், வி.ஏ.ஓ., வங்கி மேலாளர்கள் என பல பணிகளில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அரசு துறைகளில் சாமானியர்களும் பணியில் சேர்ந்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு வருவதில் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி தனி இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தவகையில் தற்போது போலீஸ் துறையில் எஸ்.ஐ. பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இப்பணியில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்காக ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி மாதிரி தேர்வை நடத்தியது. இத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி, மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று மாதிரி தேர்வை எழுதினர். முன்னதாக தேர்வு எழுத வந்தவர்களை சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் வரவேற்றார். இங்கு பயின்று டி.எஸ்.பி. யாக ஊட்டியில் பணியாற்றும் ராமசந்திரன், துாத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலர் கனிமுருகன், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையாளராக இருந்து மாதிரி தேர்வை நடத்தினர். ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி கிளை பொறுப்பாளர் ராஜேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.