கும்பகோணம், நவ. 26 –

கும்பகோணத்தில் குண்டு வெடித்ததாக நாடகமாடிய பாஜக இந்து முன்னணியின், ஆபத்தான மத வெறி அரசியலை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டின் முன்பு குண்டு வெடித்ததாக  நாடகம் ஆடிய பாஜக மற்றும் இந்து முன்னணி சங்பரிவார மற்றும் இந்துத்வா போன்ற அமைப்புகளின் ஆபத்தான மதவெறி  அரசியலை கண்டித்தும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் மத ஒற்றுமையை பாதுகாக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி பூங்கா முன்பு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் அருளரசன் சிவகுரு மாவட்ட குழு உறுப்பினர்கள்  ஜீவபாரதி நாகராஜன்  மாநகர செயலாளர் செந்தில்குமார் குடந்தை ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் மாமன்ற உறுப்பினர் செல்வம் திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் நீலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்காததைக் கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கட்டுப்படுத்த ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here