விருதுநகர், ஏப். 18: விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக 4,956 போலீசாரும், துணை ராணுவ படையினரும் நிறுத்தப் பட்டுள்ளனர். பாராளு மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்க உள்ளது. மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதி களில் 1881 வாக்குச்சாவடிகள் உள்ளன. மையங்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்வது முதல் வாக்குப் பதிவின் போது பாது காப்பு மற்றும் இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களில் சேர்ப்பது வரை பாதுகாப்பு வழங்க வேண்டும். மாவட்டத்தில் எஸ்பி ராஜராஜன் தலைமையில் மத்திய துணை ராணுவப்படையினர் 600 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 360 பேர், உள்ளூர் காவல்படை 3,152 பேர், முன்னாள் ராணுவத்தினர் 500 பேர், ஊர்காவல்படை 275 பேர், இதர பாதுகாப்பு வீரர்கள் 69 பேர் என மொத்தம் 4,956 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.