கும்பகோணம், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் மாநகரின் முக்கிய 5 க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் பெரும்பாண்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரதிமோகன், பெரும்பாண்டி, பட்டீஸ்வரம், உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
அதன் பின் அவர் பேசுகையில் கோடை காலம் வாட்டி எடுத்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே செல்ல சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். கொதிக்கும் தார் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படும் பொது மக்களுக்கு சற்று கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க மக்களின் தாகம் தணித்திடும் அறப்பணிகளில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், கும்பகோணம் ஒன்றியம் மற்றும் திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் பந்தல் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியில் திருவையாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் ராம்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு த சின்னையன், பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





















