மயிலாடுதுறை, மார்ச். 30 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு,க,ஸ்டாலின் அலை வீசுவதாகவும், மேலும் அதனால் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியாக் கூட்டணி மாபெரும் வெற்றிப்பெறும் என மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் சுதா அறிமுக கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் வருகின்ற 12 ஆம் தேதி ரமலான் பண்டிகை அன்று பிறை தென்பட்டால் பொது தேர்வு கிடையாது எனவும் அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ். வேட்பாளர் ஆர் சுதாவை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தாயாக் கூட்டணி வேட்பாளர்கள் பிரமாண்ட வெற்றியைப் பெறுவார்கள் ஏனெலில் தமிழக முதலமைச்சரின் அலைதான் மாநிலம் முழுவதும் வீசுகிறது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செல்கின்ற இடம் எல்லாம் மக்களிடம் பேராதரவு இருப்பதாகவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடையை வரவேற்பைபெற்றுள்ளதாகவும் அதனால் தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை ஏன் காத்திருக்க வேண்டும் வாக்கு பெட்டியை இன்றே வையுங்கள் வாக்கு செலுத்துகின்றோம் என்ற மனநிலையில் மக்களின் பேராதரவு இருப்பதாக அப்போது தெரிவித்தார். மேலும் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

மேலும் பொதுத் தேர்வுகள் ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், 12ம் தேதியன்று பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

மேலும் கூட்டணி கட்சிகள் சின்னங்களை கோரி விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், நிச்சயமாக எந்த சின்னம் வழங்கினாலும் நாங்கள் வெற்றி பெற பாடுபடுவோம் என தெரிவித்தார்.

அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளைதான் செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல குளறுபடிகள் இருந்ததாகவும் அதையெல்லாம் நாங்கள் பெரிதாக பொருட்படுத்தாமல் எங்களுடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான வேலைகளை செய்யும் பணியில் கண்ணும் கருத்துமாக செயலாற்றி வருகிறோம் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here