திருவாரூர், மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், இந்தியா பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும். என்பதற்காக நடத்தப்பட்ட வெல்லும் சனநாயக மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய விசிக மாநிலத்துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் மோடி வெற்றிப்பெற்றால் இந்திய அரசியலமைப்பு தூக்கி வீசப்படும் என்றும், மேலும் பின்பு மனுதர்மம் சட்டமாக்கப் படும் எனவும் அவர் அக்கூட்டத்தில் பேசினார்.
திருவாரூர் பனகல் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 26 .1. 24 ல் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் சனநாயக மாநாட்டில் திருமாவளவன் எம்பி , நிறைவேற்றிய தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் திருவாரூர் மையம் மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சா. ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 33 தீர்மானங்களை விளக்கி உரையாற்றினார்.
இதில் – சனநாயகம் காக்க போராடி உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் , பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய அரசு ஆதரவாக இணையவேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் , சென்னையை இந்தியாவின் 2 வது தலைநகரமாக அறிவித்திட வேண்டும் , ஒரே நாடு ஒரேதேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் , 2024 தேர்தலை வாக்குப்பதிவு எந்திரத்தால் நடத்தக் கூடாது , 100 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களும் ஒப்புகைசீட்டு வழங்கும் எந்திரத்தோடு இணைக்கப்படவேண்டும் , ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதன் அடிப்படையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவேண்டும் , உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவித்திடவேண்டும் , மத்திய அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் ஆளுநர் பதவி தேவையில்லை , எனவே ஆளுநர் பதவி ஒழிக்கவேண்டும் , நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்த்திட வேண்டும் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் வெல்லும் ஜனநாயக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் விளக்கிப் பேசினர்.
மேலும் இந்த மாநாடு நடைபெற்றதின் நோக்கம் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எரிந்து மனுதர்மத்தை சட்டமாக்க துடிக்கும் மோடிஅரசு வரும் 2024 தேர்தலில் தூக்கி எறியப்பட்டு , இந்திய அரசியலைப்பு சட்டம் பாதுகாக்க பட வேண்டும் என்பதற்காகவும், மேலும் இந்தியாவில் மேலும் சனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் மேலும் அது வலுப்பெற வேண்டும் என்பதற்காகவும் மேலும் அவைகளை நிறைவேற்றிட இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதே அம்மாநாட்டின் நோக்கம் என பேசினார்.
மேலும் அக்கூட்டத்தில் மண்டல துணைச் செயலாளர் ரமணி , நாடாளுமன்ற தொகுதி செயலாளர் என்டி. இடிமுரசு, முன்னாள் மாவட்டசெயலாளர் மா.வடிவழகன், சட்டமன்ற தொகுதிசெயலாளர் பா. நிலவன் ,திருவாரூர் நகரச் செயலாளர் பொன் ஆசைதம்பி , மருத்துவர்அணி மாநிலசெயலாளர் மருத்துவர் தாமரையார் , மாநில துணைச் செயலாளர்கள் கோவி. தமிழழகன் , அமுதாஇனியன் , அமுதவளவன் , ஆ. தமிழ், செல்லூர்அறவாணன் , மாநில செயற்குழு உறுப்பினர் திருமாறன் டாஸ்மாக் மண்டலசெயலாளர் நதி , திருவாரூர் சட்டமன்றத்தொகுதி துணைச்செயலாளர் மனோகரன் உட்பட மாநில, மாவட்ட , நகர , ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என 800க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .




















