பூண்டி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில்,
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் பூண்டி ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூர் கழகம் சார்பில் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை முதல் அண்ணாசிலை வரை அதிமுகவினர் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் அதில் எல்லாபுரம் ஒன்றிய அதிமுகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.. பூண்டி ஒன்றிய அதிமுகச் செயலாளர் பிரசாத், திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் சதிஷ் தண்டலம் வித்யாலட்சுமி வேதகிரி ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் ஷேக்தாவுத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரளான அதிமுகவினர் பங்கேற்ற அம்மனித சங்கிலிப் போராட்டத்தில் எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து அண்ணா சிலை வரை அதிமுகவினர் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இதில் ஊத்துக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் அருணாச்சலம், சுப்பிரமணி, பிரஸ் மணி, முகம்மது சித்திக், வி.எஸ்.சுகுமார், வி.என்.ஜெகன், ஸ்ரீவாரி கே.சுரேஷ், ஜாலி பெருமாள், ஜி.ஆர்.மோகன், பார்த்திபன்,வேதகிரி, கோதண்டன், கன்னிகை குமார், கே.விமல் என்கிற கோபிநாத், எம்.கார்த்திக், ஃபாரூக், வக்கீல்கள் வேல்முருகன், மதன், சீனிவாசன்,ஆதி, பி.நவின், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





















