பொன்னேரி, மார்ச். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

பொன்னேரி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சசி காந்த் செந்திலை ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்தால் மாதத்தில் இரண்டு நாள் உங்கள் தொகுதியில் தங்கி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுப்பதாக உறுதிமொழியளித்தார். அதனைத் தொடர்ந்து வாக்களர்களும் ஆரவாரத்துடன் உத்திரவாதம் அளித்தனர்.

பொன்னேரியில் திமுக இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்தார் அதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு இடங்களில் அக்கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இலவச பேருந்து பயணம் மூலம் 460 கோடி பயணங்கள்  பெண்கள் மேற் கொண்டுள்ளதாகவும்  முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு 18 லட்சம் மாணவர்கள் உணவு உட்கொண்டு வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும்  மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போது தாங்கள் பத்து நாள் தங்கி இருந்து பணிகளை செய்ததாகவும் ஆனால் ஒன்றிய பிரதமர் மோடி எட்டிக்கூட பார்க்கவில்லை என அவர் அப்போது குற்றம் சாட்டினார். மேலும் அதற்காக புயல் நிவாரணமாக எந்த ஒரு நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் காட்டமாக தெரிவித்தார்.

எய்ம்ஸ் கட்டுமான பணி செங்கலை  காட்டியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . இந்தக் கல்லை காட்டினால் பாதம் தாங்கி பழனிச்சாமிக்கு கோபம் வருவதாகவும் கடந்த பத்து ஆண்டு காலமாக கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டி அவர் மோடி, அமித்ஷா சசிகலாவை பார்த்தால் படுத்து விடுகிறார். எனவும், மேலும் முதுகெலும்பு இல்லாமல் ஆட்சி செய்த  ஒரே முதலமைச்சர் பழனிசாமிதான் எனவும் அப்போது அவர் தெரிவித்தார். மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று எங்கள் கூட்டணிதான் சொல்கிறோம் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியால் சொல்ல முடியுமா ஏன் பாஜகவை விமர்சிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர்  ஐபிஎல் மேட்ச்சில் பல அணிகள் இருப்பது போல் அதிமுகவில் பல அணிகள் இருப்பதாக  நகைச்சுவையாக தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராசன், துரை.சந்திரசேகர், நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் சேர்மன் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here