பொன்னேரி, மே. 05 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை நிகழ்ச்சி, பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பரத நாட்டிய கலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்பித்து வரும் இந்த பள்ளியில் 8 மாணவர்களுக்கு நாட்டியம் பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான சலங்கை பூஜை நடைபெற்றது.

முதற்கட்டமாக மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் ஆசிரியர் பூஜா நீலகண்டன் வரவேற்க பொன்னேரி ஓங்கார நாட்டியப் பள்ளியின் நாட்டிய ரத்தினம் பிரதீஷ் சிவானந்தன், நடன பூசணம் ஷீபா பிரதீஷ், நேதாஜி சோசியல் ஆர்க்கின் தலைவர் வழக்கறிஞர் ஸ்ரீதர்பாபு மற்றும் பொன்னேரி யோகா பயிற்சி ஆசிரியர் ஜோதி பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

குரு சலங்கை எடுத்துக் கொடுக்க பெற்றுக் கொண்ட மாணவிகள் திவ்யஸ்ரீ, கனிஷ்கா, ஜிவந்திகா சாய், ரூபஸ்ரீ, சிந்துஜா, வந்தனா, நிதர்ஷினி, பூமிகா ஆகியோர் சலங்கை அணிந்து கொண்டு நடனமாடினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here