திருவள்ளூர், ஆக. 12 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் வடக்கு, மீஞ்சூர் தெற்கு, மீஞ்சூர் கிழக்கு என்று பிரிக்கப்பட்டு அதற்கான திமுக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக கருணாகரனும் ஒன்றிய செயலாளராக சுகுமாரும் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளாக ரவி, ராஜேந்திரன், மீனா, ரவிச்சந்திரன், அண்ணாமலைச்சேரி ஆறுமுகம்,சி, எம்.ரமேஷ், ராஜசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவராக ராஜா, ஒன்றிய செயலாளராக வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், செல்வமணி, இந்திராசங்கர், தசரதன், மோகனசுந்தர், தாஸ், பாளையம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அதேப்போன்று மீஞ்சூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவராக பாண்டுரங்கனும் ஒன்றிய செயலாளராக ஜெகதீசன், ஒன்றிய திமுக நிர்வாகிகளாக பார்த்தசாரதி, ஸ்டாலின், கஸ்தூரி, தனசிங், குமார், முனுசாமி, குணசேகரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
பொறுப்பேற்றுக் கொண்ட அனைவரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராசனிடம் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து பொன்னேரியில் உள்ள அண்ணா, பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அப்பொழுது அவர்களுக்கு பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து திமுகவினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், நகர செயலாளர் ரவிக்குமார் பொன்னேரி தீபன், மற்றும் உமாபதி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.