இராமநாதபுரம்

   நடிகரும் , முன்னாள் எம் .பி யுமான 46 வயதுடைய ஜே.கே. ரித்திஷ் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் . அவருக்கு ஜோதிஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர் .

அவர் மார்ச் 5 , 1973 அன்று இலங்கை கண்டியில் குழந்தை வேலு, ஜெயலட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தார், அவரின் இயற் பெயர் முகவை குமார்  ஆகும். இவருடன் பிறந்த இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர்.

இராமநாதபுரம் கீழக்கரை முகமது சதாக் பாலிடெக்னிக் கல்லூரியில் , டிப்ளமோ இன் சிவில் இஞ்ஜினியரிங்க் படித்துள்ளார் .

2007 ஆம் ஆண்டு கானல் நீர் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார், அதன் பின் 2008 ல்  வெளி வந்த நாயகன் திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனார் அதனை தொடர்ந்து பெண்சிங்கம், சமீபத்தில் வெளி வந்த எல்.கே.ஜி திரைப்படத்தில்  ராம்ராஜ் பாண்டியன் என்ற கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

 

 

அரசியலில் ஆரம்பத்தில் அதிமுக உறுப்பினராக இருந்த ரித்திஷ் அதிலிருந்து விலகி திமுக வில் இணைந்தார் பின்பு நடந்த 15 வது மக்களவை (2009)தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக  இத்தொகுதியில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here