செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.22-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற விழாக்களில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10 புதிய துணை சுகாதார நிலைய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர் மூலம் தாய் சேய் நலம், தடுப்பூசி பணிகள், குடும்பநலம், பிரசவ பராமரிப்பு மற்றும் பிரசவத்தின் பராமரிப்பு குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து பணிகள், பால்வினை நோய் குறித்த அறிவுரைகள் மற்றும் நோய்க்கான சிகிச்சை போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கிடும் வகையில் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
இந் நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குனர் ரவீந்திரன், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற் பொறியாளர் செந்தூர், வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் நெப்போலியன், டாக்டர் சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.