கும்பகோணம், மே. 05 –

கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு 4 வழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளார்.

ஆசூர் மெயின் ரோடு ரமேஷ் குமார் மகன் சிவப்பிரகாசம் வயது 23 இவர் நேற்று சுவாமிமலை அருகே ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 10 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது தேவர் சிலை முன்பு உள்ள சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடத்தில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயம் பட்டவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவப்பிரகாசத்தின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here