திருவாரூர், மார்ச். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கட்டடம் கட்டும் தொழில் செய்து வருபவர் 42 வயதுடைய செல்லதுரை என்பவராவர். மேலும் அவருக்கு திருமணமாகி 20 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த வருடம் அவருடைய மனைவி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு 19 வயது மற்றும் 17 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மனவியையிழந்த செல்லத்துரை தனது இரு மகள்களோடு வசித்து வந்துள்ளார். மேலும் செல்லதுரை மது போதைக்கு அடிமையானவர் எனவும் அதனால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வழக்கமாக வருவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது 19 வயது மகள் மற்றும் 17 வயது மகள் ஆகிய இருவரையும் பாலியல் ரீதியாக செல்லதுரை அடிக்கடி தொந்தரவு  செய்தும், பலமுறை உடலுறவு கொண்டும் வந்துள்ளார். மேலும் அதுக்குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலரின் துணையுடன் அவரின் இரு மகள்களும் சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் 17 மற்றும் 19 வயது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் தந்தையே தனது இரு மகள்களிடமும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் விளைவாக செல்லதுரையை  நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனது சொந்த மகள்களையே பாலியல் தொந்தரவு செய்த தந்தை விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here