கும்பகோணம், ஜன. 26

கும்பகோணத்தில் தமிழக அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அரசாணை 84ன் படி, கடந்த 01ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொது மக்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டாளர்கள் மற்றும் வணிகர்களிடையே மீண்டும் மஞ்சள் பை இயக்கத்தை செயல்படுத்திட ஏதுவாக,  மகாமகக் குளக்கரை பகுதியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று மேற் கொள்ளப்பட்டது

இதனை கோட்டாட்சியர் லதா தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சுழல் பொறியாளர் விஜயபிரியா ஆகியோரது முன்னிலையிலும் சட்டமன்ற உறுப்பினர்  அன்பழகன், பொது மக்களுக்கு இலவசமாக மஞ்சள் பைகளை வழங்கி பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here