சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் அப்துல்ரகுமான் மற்றும் உறுப்பினர்கள் நவாஸ்கனி, எம்.பி, முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ, ஆசியா மரியம் ஐ.பி.எஸ்., டாக்டர் ஹாஜா கே.மஜித், எம்.கே.கான், சோஹைல் ஹைதர் கான், சையது ரகுமான், பாத்திமா முசாபர், சையது அலி அகமது ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.