செங்கம் பிப்.16-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டத்தில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டனர் .

   உடற்கல்வி, இசை, ஓவியம், கணினி, தையல் போன்ற பாடங்களை கற்பித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது பத்தாயிரம் சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தோம் பணி நிரந்தரம் செய்யாததால் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர். .திமுக தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கையிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ள நிலையில் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும், ஆணையும் வரவில்லை. இதனை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி சென்னை டிபிஐ வளாகத்தில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

   வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் புதுப்பாளையம் தண்டராம்பட்டு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றார்கள். செங்கம் தண்டராம்பட்டு புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொடர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக  மாவட்ட நிர்வாகிகள் பாடலி, கந்தன்,  ஆகியோர் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here