கும்பகோணம், ஜூலை. 10 –
திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் அருகே உள்ள மணக்குண்ணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்ட்டுள்ள புதிய பள்ளிக்கட்டடத்தை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், தமிழக அரசு தலைமை கொறடா கோவிசெழியன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தின் கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது எனவும், மேலும், அரசில் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அந்த வகையில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி முடிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆன்மீக திருக்கோயில் வழியாக அறிவு திருக்கோயிலை திறக்கும் இந்நிகழ்வு மிகுந்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறினார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.






















