சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறள்அமிர்தம் என்ற இசைத்தட்டினை வெளியிட்டார். அதில் திருக்குறள் தமிழிசைப் பாடல்கள், மற்றும் திருக்குறள் வாழ்த்துப்பா போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியின் போது, நூல் ஆசிரியர் கோ.திருமுருகன், நா.நாராயணன், இராம.சுப்பையா, பூ. கார்த்திகேயன், ம.வசந்தகுமார், க.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.