பொன்னேரி, பிப். 24 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது ஆண்டு பிறந்தநாள் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வழிக்காட்டுதலின் பேரில் மீஞ்சூர் ஒன்றியக் கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொன்னேரி, நாலூர், மீஞ்சூர், மெரட்டூர், திருப்பாலைவனம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதியில் இருந்து பங்கேற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஜெயலலிதாவின் திருஉருவ படத்தை நிருவி அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் அன்னதானங்களை பொது மக்களுக்கு கட்சித் தொண்டர்களுக்கும் வழங்கினர்கள்.
மேலும் இதில் மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை, ஆறுமுகம், பா. சங்கர், உபயதுல்லா,பொன்னேரி நகர்மன்றத் துணைத் தலைவர் சின்னக்காவணம் விஜயகுமார், சேகண்யம் சீனு,மீஞ்சூர் வழக்கறிஞர் மாரி,தமிழரசன்,கோளூர் குமார்,சலீம் அண்ணாதுரை, அருண்ராஜ் பச்சையப்பன்.மெரட்டூர் திருமுருகன் வாரிய பொறுப்பாளர்கள் பாஸ்கர், கஜேந்திரன், லோகநாதன், தேசப்பன், தேவன், வெற்றிவேல் உள்ளிட்ட திரளானவர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.























