தஞ்சாவூர், பிப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி அம்மகிழ்சியை கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் தினசரி சென்னை சென்று வர மீண்டும் கம்பன் விரைவு ரயிலை இயக்கவும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று காலத்தில்  பயணிகள் ரயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்பு கட்டணமாக உயர்த்தப்பட்டது. கொரோனா தொற்று முடிந்து சகஜ நிலைக்கு திரும்பினாலும் பயணிகள் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் குறைக்கவில்லை.

அதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இக்கோரிக்கையினை ஏற்று திருச்சி கோட்ட தென்னக ரயில்வே இன்று முதல் சாதாரண பயணிகள் ரயில்களின் கட்டணத்தை முன்பு இருந்த நிலைக்கு குறைத்துள்ளது. ரயில் நிலையங்களில் மீண்டும் பழைய கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகின்றன. அதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள்,  தினசரி ரயிலில் செல்லும் அலுவலர்கள் மாணவ, மாணவிகள், வர்த்தகர்கள், தொழிலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் ரயிலை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. தற்போது குறைக்கப்பட்ட திருவாரூர் –  காரைக்குடி பயணிகள் ரயில் கட்டண விபரம். பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு ஏற்கனவே 45 ரூபாய். தற்போது குறைக்கப்பட்ட கட்டணம் ரூபாய் 20 மட்டுமே. ரயில் கட்டணம் குறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கத்தினர் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில்,  கொரோனா காலத்தில் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு 65 ரூபாய். இன்று முதல் 35 ரூபாய். பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு 45 ரூபாய். தற்போது இன்று முதல் 20 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இது எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்றனர். மேலும் இதற்காக ஒட்டு மொத்த ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயத்தில் இந்த பகுதி பொதுமக்கள் பெருமளவில் பயன்பெற்று வந்த தினசரி சென்னை சென்றுவர ஏதுவாக மீண்டும் கம்பன் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றனர்.‌

பேட்டி: 1. முத்துக்குமார்

  1. ஐஸ்வர்யா,
  2. ஆல்வின் – ரயில் பயணிகள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here